இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை ரத்து செய்தது இந்தோனேசியா
அட்மின் மீடியா
0
இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்துக்கு தங்கள் நாட்டு மக்களை அனுப்புவதில்லை என்று இந்தோனேசியா முடிவு என செய்தி வெளியிட்டுள்ளது அல்ஜஸிரா
உலகிலேயே அதிக இஸ்லாமிய மக்கள் வாழும் நாடு இந்தோனேசியா அங்கிருந்து வருடந்தோரும் சுமார் 2,20000ம் மக்கள் புனித ஹஜ் பயனம் மேற்கொள்கின்றார்கள்
இந்நிலையில் புனித ஹஜ் பயனம் குறித்து அந்த நாட்டு மத விவகாரத் துறை அமைச்சா் ஃபக்ருல் ராஸி கூறுகையில், கொரானா வைரஸ் அச்சம் நிலவி வரும் சூழலில், ஜூலை மாதம் ஹஜ் பயணத்துக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து சவூதி அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இனிமேல் அதற்கான அறிவிப்பு வந்தாலும், புனிதப் பயணிகளை அனுப்பவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குப் போதுமான அவகாசம் இல்லை. எனவே, இந்த ஆண்டில் ஹஜ் பயணத்துக்கு யாரையும் அனுப்பப் போவதில்லை' என்றாா்.
சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
மேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..!
Tags: வெளிநாட்டு செய்திகள்