நொறுக்குதீனிகளுக்கு பயன்படுத்தும் ஒரு முறை பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு அரசானை
நொறுக்குத் தீனிகளை அடைப்பதற்காக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை
இனி கடைகளில் நெருக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2019 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பேக், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்தது.
இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் எனவும், விலக்களிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.
அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.
இதன் காரணமாக நொருக்குத்தீனி அடைத்து விற்பனை செய்யப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடைகளில் விற்கப்படும் லேய்ஸ், குர்குரே போன்றவற்றை அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்தது
இதன் மூலம் திண்பண்டங்கள் உள்ளிட்டவைகளை மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பையில் பேக் செய்ய தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது தமிழக அரசு
Tags: தமிழக செய்திகள்