இந்திய ராணுவம் தற்போது அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் சீனாவின் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 17 ராணுவத்தினரும் வீர மரணம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து லடாக் எல்லையில் சீனாவின் தாக்குதலில் மொத்தம் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையும் காப்பதில் உறுதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது லடாக்கில் சண்டை நடந்த கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இரு தரப்பு ராணுவத்தினரும் விலகிவிட்டதாகவும் தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் பதில் தாக்குதலில் சீனா ராணுவத்தினர் பலர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ் ஏற்கனவே 5 வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்திருந்தது.
இந்த நிலையில் சீனா தரப்பில் மிக கடுமையான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றன தகவல்கள்.