Breaking News

கருப்பு பட்டியலில் வெளிநாட்டு தப்லிக் ஜமாத்தினர் : 10 ஆண்டுகள் இந்தியாவிற்குள் நுழைய தடை: மத்திய அரசு அதிரடி

அட்மின் மீடியா
0
டில்லியில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற  வெளிநாட்டினர்களை கருப்பு பட்டியலில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



டில்லியில் நிஜாமுதீன் பள்ளிவாசலில் தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில்கூட்டம் நடைபெற்றது அதில் மலேஷியா, வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர்.

கொரோனா ஊரடங்கை மீறி, இந்த கூட்டம் நடைபெற்றது என டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய விசா சட்ட விதிகளை மீறியதாக 960 பேரின் சுற்றுலா விசாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரலில் ரத்து செய்தது.

இதை தொடர்ந்து இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசா ரத்து செய்யப்பட்ட 960 வெளிநாட்டினரின் பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இவர்கள் 10 வருடங்கள் இந்தியாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது




சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள செய்தியினை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 7904540745) அனுப்பவும், அந்த செய்தியினை ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 
 மேலும் உங்கள் பகுதி சுற்றுவட்டார செய்திகளை நம் அட்மின் மீடியாவில் பதிவிட +917904540745 என்ற எண்ணிற்கு உங்கள் செய்திகளை அனுப்புங்கள்..!

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback