Breaking News

பிஎம் ஸ்வநிதி திட்டம்: சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 சிறப்பு கடனுதவி : மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று 02.06.2020 நடந்தது. 




அதில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மற்றும் தெருவோர வியாபாரிகளை மீண்டும் வியாபாரத்தில் ஈடுபடுத்த சிறு கடன் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது  பிஎம் ஸ்வநிதி எனப்படும் இக்கடன் திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 வங்கிக் கடன் தரப்படும். 


இக்கடனை வியாபாரிகள் மாதத் தவணயாக ஒரு ஆண்டிற்குள் செலுத்தி விட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும் என்றும், 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback