Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்க தமிழக முதல்வர் உத்தரவு

அட்மின் மீடியா
0

அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.



இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு ஜூன் 30- ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூபாய் 1,000 வழங்கப்படும். ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் கருதி நிவாரண நிதி வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வேலை இன்றி பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

எனவே ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback