Breaking News

UNLOCK 1.0: இனி மாநிலங்களுக்கிடையே செல்ல இ பாஸ் வேண்டாம் : மத்திய அரசு

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மூன்றுகட்ட தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு முதல்கட்டமாக  ஜூன் 8ஆம் தேதி முதல் உணவகங்கள், அனைத்து வழிப்பாட்டுத் தலங்கள், மற்றும் வணிக வளாகங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது


மேலும் இ- பாஸ் தேவையில்லை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தத்தடையும் கிடையாது. இதற்காக இ-பாஸ் பெற தேவையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை, ஆனால் இதில் மாநில அரசுகள் சொந்தமாக முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால்தமிழக அரசின் அறிவிப்புக்காக பலர் காத்திருக்கின்றார்கள்.


Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback