Breaking News

FACT CHECK: வெட்டுக்கிளி சாப்பிடுவது ஹலாலா? அல்லது ஹராமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வெட்டுக்கிளி களை அரபு மக்கள் சாப்பிடுகிறார்கள்.அதை சாப்பிடுவது ஹலாலா அல்லது ஹராமா என்ற ஒரு பதிவை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


ஆம் வெட்டுக்கிளி களை சாப்பிடுவது ஹலால் தான்.

அதை உயிருடன் சாப்பிடலாமா என்று பார்த்தால் உயிருடன் எந்த ஒரு காரணமும் இல்லாமல் சாப்பிடுவது வெறுக்கப்பட்ட ஒரு செயல். 

நாம் அந்த உயிரினத்திற்க்கு  நோவினை செய்தது போல் ஆகிவிடும். எனவே அதை தீயில் சுட்டோ அல்லது நீரில் வேகவைத்தோ அதனுடைய கழிவு பொருட்களை நீக்கி  விருப்பமிருந்தால் தாராளமாக சாப்பிடலாம்.


இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வது.

 இது போன்ற வசதிகள் இல்லையென்றால் நம்முடைய மார்க்கத்தில் அனுமதி உள்ளது. 

ஒருவர் பசியின் காரணமாக உயிர் போகும் நிலையில் இருக்கிறார் சாப்பிடுவதற்கு பன்றி இறைச்சி தான் இருக்கிறது என்றால் அவர் உயிர் வாழ தேவையான அளவு மட்டும் சாப்பிட அனுமதி உள்ளது.

ஆனால் மற்ற நேரங்களில் அதை தொடுவது கூட அசுத்தமானது. சாப்பிடுவது தடுக்கப்பட்டது.

அதேபோல் தான் இந்த வெட்டுக்கிளியும் அதன் கழிவு பொருட்களை நீக்கி விட்டு சாப்பிடலாம்.தகுந்த காரணமின்றி உயிருடன் சாப்பிடுவது வெறுக்க தக்க செயல் 


அட்மின் மீடியாவின் ஆதாரம்


ஸஹீஹ் புகாரி: 5495.
அத்தியாயம் : 72 

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback