Breaking News

FACT CHECK: காரில் சானிடைசர் உபயோகித்தபோது தீ பிடித்தது என்ற செய்தி உண்மையா?....

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   டெல்லி ரோகினி மேம்பாலத்தில் சானிட்டர்  கொண்டு சென்ற கார் எரிந்து சாம்பலானது. தயவு செய்து, ஒருபோதும் காரில் சானிட்டிசர் பாட்டில்களை எப்போதும் வைத்திருக்க வேண்டாம். ஒரு பாட்டிலில் மிகச் சிறியதே எடுத்துச் செல்லவும். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  சம்பவம், டில்லியில் உள்ள மங்கோபுரி பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே கடந்த 21 ம் தேதி வியாழகிழமை அன்று  நடைபெற்றது. 

அந்த கார் திடிரென தீப்பிடித்தது காரில் இருந்து அதில் இருந்த டிரைவர் இறங்க முயற்சி செய்துள்ளார்கள் ஆனால் கார் கதவும் சீல் பெல்ட்டும் இயங்காததால்  அவர் இறங்க முடியவில்லை

மேலும் அக்கம் பக்கத்தினர் அவரை காப்பற்ற முயற்சி செய்தனர்  ஆனால் காரில்  நெருப்பு வேகமாக பரவியது மேலும் அந்த காரில்  பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் கார் தீ கட்டுபடுத்தமுடியாமல் போனது

இந்த விபத்தில்  டிரைவர் தப்பிக்க வாய்ப்பு கிடைக்காததால் அந்த கார்  ஓட்டுநரான, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலியானார். 

போலிஸார் அந்த தீ விபத்திர்க்கு காரில் இருந்த  CNG எரிவாயு கசிவின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றார்கள் 

ஆனால் சிலர் அந்த சம்பவம் ஹேண்ட் சானிடைசரால்  தான் நடந்தது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.


அட்மின் மீடியா ஆதாரம்:



அட்மின் மீடியா ஆதாரம்:



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback