Breaking News

FACT CHECK: ஜூன் 1 ம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்படுகின்றதா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஜூன் 1-ம் தேதி முதல் தமிழக கோயில்கள் திறக்கப்படுவதாக ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தியின் உண்மை என்ன?


கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் தமிழகம் முழுவதும் திருக்கோயில்களில்  வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவருகின்றது மேலும்  பக்தர்கள் அதில் கலந்துகொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால் தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டை அனுமதிப்பது குறித்து இன்னும் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. எனவும் அறநிலையத்துறை சார்பிலும் அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை என அறநிலையத்துறை மக்கள் தொடர்பு அலுவலர் மருதபிள்ளை தெரிவித்துள்ளார்  என விகடன் மற்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback