சவுதியில் இருந்து சென்னைக்கு மூன்றாம் கட்ட வந்தேபாரத் திட்டம் சிறப்பு விமானம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திட்டத்தின் 3ம் கட்டமாக சவுதியில் இருந்து தமிழகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே 26 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி சவுதியில் இருந்து மூன்று விமானங்கள் தமிழகத்திற்கு வரஉள்ளது
ஜூன் 4 ஆம் தேதி ரியாத்தில் இருந்து சென்னைக்கு ஒரு விமானமும்
ஜூன் 5 ம் தேதி தமாம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு ஒரு விமானமும்,
ஜூன் 6 ம் தேதி ஜித்தா சர்வதேச விமான நிலையத்திலிருந்துசென்னைக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
Embassy Press Release regarding additional flights from the Kingdom in Phase 2 of #VandeBharatMission pic.twitter.com/EkHBnvWP1B
— India in SaudiArabia (@IndianEmbRiyadh) May 24, 2020
Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்