Breaking News

எங்குப்பார்த்தாலும் கலவரம் என்ன நடக்குது அமெரிக்காவில்... என்ன நடந்தது வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0
அமெரிக்காவில்  மின்னபொலிஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின  நபரை போலிஸ் விசாரணை அதிகாரி, கைது செய்யும் போது அந்த இளைஞரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை வேண்டும் என்றே மிதித்தார்.இதில் ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அங்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 



போலீஸாரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்னபொலிஸ் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இதையடுத்து அந்த  போலீஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே மின்னபொலிஸ் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நேற்று முன் தினம் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது



 
 
 
 
 

Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback