கொரானாவை விரட்ட அமீரகம் செல்லும் இந்திய மருத்துவ குழு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ்சிற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு உதவவேண்டும் என்று அமீரக அரசால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று 88 சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட இந்திய மருத்துவக் குழுவின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றது
இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 88 பேரை உள்ளடக்கிய குழுவை அமீரகத்திற்கு அனுப்ப இந்திய அரசு அனுமதித்துள்ளது என்று புதுடெல்லியில் உள்ள இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Within the framework of the keenness of @UAEembassyIndia to support efforts of UAE in combating #Covid_19, Indian authorities allowed to send first batch of medical team of 88 specialists, doctors & nurses to UAE within short period to support UAE's efforts in fighting #Corona. pic.twitter.com/F00vRjX1uk— UAE Embassy-Newdelhi (@UAEembassyIndia) May 2, 2020
மேலும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமீரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க இந்தியாவை சேர்ந்த 88 பேரை உள்ளடக்கிய மருத்துவ குழுவை மிகவும் குறுகிய காலத்திற்குள் அமீரகத்திற்கு அனுப்ப இந்திய அரசு அனுமதித்துள்ளது அமீரகம் மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளின் மீது இந்திய அரசு கொண்டுள்ள சிறப்பு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
