Breaking News

ஹைட்ராக்சின் குளோரோகுய்ன் மாத்திரை கொடுத்தால் நமது நாட்டு தேசிய கீதத்தை பாடும் அமெரிக்கர்கள்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஹைட்ராக்சின் குளோரோகுய்ன் மாத்திரையை அமெரிக்காவுக்கு கொடுத்ததற்க்கு நன்றிக்கடனாக நமது நாட்டு தேசிய கீதத்தை அமெரிக்க மாணவர்கள் பாடி அசத்திய அற்புத மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி"நீங்களும் கண்டு களியுங்கள்,
என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


அந்த வீடியோ சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

ஆனால் இந்திய அரசின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 12.08.2017 அன்று அனிஷா தீக்‌ஷித் என்பவர் தனது யூடிப்பில் பதிவு செய்துள்ளார்

அதில் அவர் உலகில் பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் பாடிய இந்திய தேசிய கீதம் என்று பெருமையுடன் கூறியுள்ளார் மேலும் இந்த வீடியோ தயாரிக்க  நான் மிகவும் கடினமாக உழைத்தேன் அது என் இதயத்திற்கு மிக நெருக்கமானது.என்றும் கூறிஉள்ளார்

எனவே பழைய வீடியோவை எடுத்து தற்போது நடந்தது போல் பொய்யாக ஷேர் செய்து வருகின்றார்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback