பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பு:
அட்மின் மீடியா
0
ஈரோட்டில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கினால் பொதுமக்கள் எல்லாம் வீடுகளில் முடங்கி உள்ள்ளனர் இதனால் வீட்டிற்குள் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பொழுதை போக்க மொபைலில் கேம் விளையாடி பொழுதை கழிக்கின்றார்கள்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கமலா நகரை சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவன் வீட்டிற்கு அருகில் திடலில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தார். சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி