Breaking News

மதுகடை திறந்தால் பள்ளிவாசல் திறந்து தொழுகை நடத்துவோம் என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும்  தமிழகத்தில் டாஸ்மார்க்கை (மது கடை) திறந்து குடிக்க அனுமதிக்குமானால் நாங்கள் பள்ளி வாசல்களை திறந்து தொழுகை நடத்துவோம்.  உரிமையை மீட்க  உயிரையும் இழப்போம் ஆர்பரித்து முழங்க அணி திரண்டு வருவோம் என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?



இந்த அறிவிப்பை  நம் இஸ்லாமியகூட்டமைப்பு அறிவித்துள்ளதா?


இல்லை


இந்த அறிவிப்பை ஏதாவது இஸ்லாமிய இயக்கங்கள் அறிவித்துள்ளதா?


இல்லை

இந்த அறிவிப்பை பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளதா?

இல்லை


இந்த அறிவிப்பை ஏதாவது இஸ்லாமிய அமைப்புகள்   அறிவித்துள்ளதா?


இல்லை


இந்த அறிவிப்பை  ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளதா?

இல்லை


மேற்கண்ட யாரும் அறிவிக்காத ஒன்றை யாரும் நம்பவேண்டாம்

மேலும் இது குறித்து ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா அன்வர் பாதுஷா உலவி  மற்றும்

அனைத்து இஸ்லாமிய  இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சென்னை மக்கா பள்ளி இமாம் மவுலானா மன்சூர் காஷிஃபி அவர்களிடம்  இது குறித்து அட்மின் மீடியா கேட்டபோது

அந்த புகைபட தகவல்கள் பொய்யானது, அது போல் யாரும் அறிவிக்கவில்லை என கூறினார்


மக்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.   மதுக்கடைகளை திறப்பதற்கும் பள்ளிவாசல்கள் திறப்பதற்கும் என்ன சம்பந்தம்


அந்த செய்தி ஒரு மொட்டை கடுதாசி போல் உள்ளது  மேற் குறிப்பிட்ட யாரும் இது போல் மொட்டை கடுதாசி அனுப்பி போராட்டம் செய்யமாட்டார்கள்.


சிலர் இஸ்லாமிய மார்க்கத்தை கொச்சை படுத்த வேண்டும் என்று இது போன்ற விஷயங்களை ஃபோட்டோ ஷாப் மூலம் எடிட்டிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். 


நாமும் அதனை ஃபார்வர்டு செய்து வருகிறோம். தயவு செய்து உண்மை தன்மை தெரியாமல் இருக்கும் விஷயங்களை ஃபார்வர்டு செய்ய வேண்டாம் என்று உங்களை அட்மின் மீடியாவின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback