Breaking News

FACT CHECK: ஏர் இந்தியா விமானத்தை கத்தார் அரசு திருப்பி அனுப்பியதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில்   பலரும் மோடி அரசால் இந்திய நாட்டிற்க்கே அவமானம் கத்தார் நாட்டிலிருந்து இந்தியர்களை இலவசமாக அழைத்து வருவதாக கூறி பயணிகளிடம் பணம் வசூல் செய்ததால் இந்திய விமானத்தை திருப்பி அனுப்பி விட்டது என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

தோஹாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐஎக்ஸ் 374,  பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.45 மணியளவில் திருவனந்தபுரத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. 

அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் நேற்று புறப்படவில்லை மாறாக இன்று புறப்படுகிறது. இந்த செய்தியினை  கத்தார் எம்பசி தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர் ஒரு படி மேலே போய் விமானம் திருப்பி அனுப்பபட்டுவிட்டது என்று வதந்தி பரப்புகின்றார்கள், விமானம் திருப்பி அனுப்பபடவில்லை பயண நாள் மற்றும் நேரம் மட்டும் தன் மாற்றபட்டுள்லது  ஆனால் அந்த விமானம் புறப்படுவதற்க்குள்  பல்வேறு தலைப்புகளில் வதந்திகளை பரப்பி விட்டார்கள்






எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback