Breaking News

ஊரடங்கு காலத்திற்கு மின் கட்டணக் கணக்கீடு செய்வது எப்படி? தமிழக மின்வாரியம் விளக்கம்

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்  கடந்த 2  மாதங்களாக மின் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. 



இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில் 




வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு, சம்பந்தப்பட்ட அடுத்த மின் கணக்கீடு நாளன்று எடுக்கப்படும்.எனவே, அவர்களுக்கு மின் கணக்கீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும். அதற்கான மாதிரி கணக்கீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


உதாரணமாக ஒரு நுகர்வோரின் மின் அளவீடு கோவிட்-19 காரணமாக முந்தைய மாத கணக்கீடுபடி எடுக்கப்பட்டு பின்னர் அதைத் தொடர்ந்து அடுத்த இருமாத மின் அளவீடு அடுத்த கணக்கீடு மாதத்தில் மேற்கொள்ளப்படும்போது கீழ்வருமாறு கணக்கீடு செய்யப்படும்:மின் அளவீடு கணக்கீடு செய்யப்பட்ட மாதம் மின் அளவீடு நுகர்வு கணக்கீடு விவரம்ஏப்ரல் மாதம் மின்கட்டணம் ரீடிங் எடுக்காததால்  பிப்ரவரி மாத மின் கட்டணம் செலுத்தியவர்கள் ஜூன் மாதம் மீட்டர் ரீடிங் எடுக்கும் போது எவ்வாறு கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதின் விளக்கம் விளக்கம் 


மேலும் விவரங்களுக்கு http://www.tangedco.gov.in/linkpdf/pressrelease(552020).pdf

















Share this