Breaking News

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் கோரிக்கை

அட்மின் மீடியா
0
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க பொதுச் செயலாளர்  அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் தமிழக முதல்வருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில்



வேலைக்கான விசாக்கள் காலாவதியாகி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு அறிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் இந்தியா திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானக் கட்டணத்தையும் ஏற்கத் தயார் என்று குவைத் அரசே அறிவித்த பிறகும், தமிழர்களை அழைத்து வருவதில் தாமதம் கூடாது எனவே உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி குவைத் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் ஒரு வாரத்திற்குள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது என்று தெரிவித்துள்ளார் .








Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this