Breaking News

வாணியம்பாடியில் தள்ளுவண்டியை பழங்களோடு சாய்த்தது ஏன்? நகராட்சி கமிஷனர் விளக்கம்

அட்மின் மீடியா
0
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை சாலை தூக்கி எறிந்தும், அவர்களது வண்டிகளை தள்ளி விட்டு கவிழ்க்கும்  வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

     


இது குறித்துநகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ் அவர்கள் 

வாணியம்பாடி நகரில் உள்ள சந்தையில் தடை உத்தரவை மீறி சில வியாபாரிகள் கடைகளைத் திறந்தும் தள்ளுவண்டியிலும் வியாபாரம் செய்யத் தொடங்கினர்.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாமலும் கூட்டம் கூடினர். 

இதையறிந்து சந்தைப் பகுதிக்குச் சென்று கடைகளை மூடுமாறு கடந்த மூன்று தினங்களாக வியாபாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். ஒருவர் கூட கடையை மூடவில்லை. அலட்சியப்படுத்தி வியாபாரத்தைத் தொடர்ந்தனர். 

நான், வேண்டுமென்றே இதைச் செய்யவில்லை. அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் அப்படிச் செயல்பட நேர்ந்தது. இரவு பகலாக கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஆனால், ஓய்வில்லாமல் இவர்களுக்காகத்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வியாபாரிகளைக் கஷ்டப்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை. தவறை உணர்ந்துவிட்டேன். என்னுடைய செயலால் வியாபாரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்   என்று கூறியுள்ளார்


Tags: மறுப்பு செய்தி

Share this