Breaking News

கிருஷ்ணகிரியில் உள்ளது சாதாரண வெட்டுக்கிளிதான் : மாவட்ட ஆட்சியர் விளக்கம்

அட்மின் மீடியா
0
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், நேற்று மாலை, ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன.




தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வரவாய்ப்பில்லை என்று கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் வந்த வெட்டுகிளிகள் என நேற்று முதலே அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர் அவர்கள்  நேரலகிரி கிராமத்தில் காணப்படும் வெட்டு கிளிகள் பாலைவன வெட்டுகிளிகள் இல்லை, மேலும் எருக்கன் செடிகளில் மட்டுமே இருக்க கூடிய சிறு கொம்பு வெட்டு கிளிகள் என்றும்  அதனால் அச்சம் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback