இந்தியா எனும் பெயர் வேண்டாம்..பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்றுங்கள்..! உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அட்மின் மீடியா
0
இந்தியாவின் பெயரை மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் நமா என்பவர் வழக்கு தொடர்ந்தள்ளார்.
அவரது மனுவில் இந்தியா என்ற பெயர், ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை தொடர்ந்து நினைவுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்திய அரசியல் சாசனத்தில், இந்தியா என்ற பெயரை, 'பாரதம் அல்லது ஹிந்துஸ்தான்' என, மாற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பாரத் அல்லது இந்துஸ்தான் எனும் சொல்லே உணர்வைத் தூண்டும் நமது தேசியத்தில் பெருமை கொள்ள வைக்கும் என்றும்
எனவே அரசியலமைப்பின் 1’வது பிரிவில் இந்தியாவை விலக்கி பாரத் அல்லது இந்துஸ்தான் என திருத்தத்தை கொண்டுவருவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, ஜூன், 2ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக் எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்