Breaking News

கிராம பகுதியில் 19 ம் தேதி முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி: தமிழக அரசு அரிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் கொரானா ஊரடங்கால் 31.05.2020 வரை ஊரடங்கு அமலில் உள்ளது இந்நிலையில் சலூன்கடைகள் திறக்க அனுமதி இல்லாமல் இருந்தது


இந்நிலையில் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் முதல் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் 
கடையில் பணி புரியும் அனைவரும் கையுறை அணிந்து முடி திருத்தவேண்டும் மற்றும்  முகக்கவசங்கள் அணியவேண்டும்

மேலும் கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குகவேண்டும் எனவும் மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்.

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback