Breaking News

சிறுமி ஜெயஸ்ரீ வழக்கில் காலம் தாழ்தாமல் விரைவாக தீர்ப்பு வழங்க அட்மின் மீடியா கோரிக்கை வைக்கின்றது

அட்மின் மீடியா
0
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே முன்விரோதத்தினால் சிறுமி ஜெயஸ்ரீ தீ வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


தாமதிக்கபட்ட நீதி மறுக்கபட்ட நீதிக்கு சமமானது எனவே வழக்கை விரைந்து நடத்தி இக்கொலைக்கு காரணமானவர்கள் மீது எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.


இந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இனி இத்தகைய கொலை பாதகங்களைச் செய்ய நினைப்பவர்களுக்குப் ஒரு பாடமாக அமைய வேண்டும். 


சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அட்மின் மீடியா  தெரிவித்துக் கொள்கிறது

ஜெயஸ்ரீ அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கின்றோம்






Tags: முக்கிய அறிவிப்பு

Share this