உங்கள் மொபைல் போனுக்கு லின்ங் வந்தால் ஜாக்கிரதை : லின்ங் கிளிக் செய்தா அவ்வளவுதான் உங்க பணம்
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸை பயன்படுத்தி, வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்தை திருட நவீன தொழில்நுட்ப மோசடி ஒன்று நடக்கின்றது எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க சிபிஐ கேட்டுகொண்டுள்ளது
பாங்கிங் ட்ரோஜன் செர்பரஸ் என்று இந்த மோசடியை அழைக்கின்றார்கள் உங்கள் ஸ்மார்ட் போன்க்கு ஒரு எஸ்.எம்.எஸ். அதில் கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கு உங்கள் வங்கி கணக்கில் ஒரு பெரிய தொகை செலுத்தப்படும் என்று செய்தி இருக்கும் அதற்க்கு அதில் உள்ல இணைப்பை லிங்க்கை கிளிக் செய்து இதனை டவுன்லோடு செய்ய சொல்வார்கள்.
குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்து நீங்கள் அதனை டவுன்லோடு செய்தால் அவ்வளவு தான் உங்கள் விவரம் அனைத்தும் அந்த எஸ்.எம்.எஸ். அனுப்பிய மோசடி நபரின் கைக்கு சென்று விடும்.
அதைக் கொண்டு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு எண், டெபிட் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து ரகசிய தகவல்களையும் அவர்கள் எளிதாக திருட முடியும். இது சர்வதேச அளவில் இப்போது பரவி வருவதாக 'இன்டர்போல்' எச்சரித்துள்ளது அதன்பேரில் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும், போலீஸ் துறையினரையும் சி.பி.ஐ. உஷார்படுத்தி உள்ளது
Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு