பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த அனுமதி கோரி வழக்கு
அட்மின் மீடியா
0
பள்ளிவாசல்களில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது, என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்
அம்மனுவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் சிறு சிறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே 5 வேலை தொழுகை நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களின் நோன்பு நிறைவு நாளான ரம்ஜான் ஈத் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்த வேண்டியுள்ளது.
இந்த தொழுகையை பள்ளிவாசல் அல்லது திறந்த மைதானங்களில் நடத்துவது கடமை. எனவே, அன்றைய தினம் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் முறையாக சமூக விலகலை பின்பற்றி காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டும் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
