சொந்த ஊர் செல்பவர்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் வெளி மாநிலங்களில் உள்ளவர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 2ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர்.
இந் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அதில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய உள் விவகாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.சிறப்பு ரயில்கள் மூலமாக வெளிமாநில மக்களை அனுப்பும் நடைமுறைகள் குறித்து மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
Movement of migrant workers, pilgrims, tourists, students & other persons, stranded at different places, is also allowed by #SpecialTrains to be operated by @RailMinIndia. MoR to designate nodal officer(s) for coordinating with States/ UTs for their movement#lockdown #Covid_19 pic.twitter.com/UvEvDH1Ibj— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 1, 2020
Tags: முக்கிய அறிவிப்பு
