Breaking News

புதுச்சேரியில் ஜூன் 8 ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுதளங்களும் திறக்கப்படும்: முதல்வர் நாராயணசாமி

அட்மின் மீடியா
0
கொரானா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஊரடங்கில் சில தளர்வுகளையும் அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவித்தது  அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான 3 கட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. 



இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சில தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது;




ஜூன் 8-ம் தேதி முதல் அனுமதிக்கபட்ட தளர்வுகள் 


புதுச்சேரியில் வணிகவளாகங்கள் இயங்கலாம்

மேலும் புதுச்சேரியில் கடற்கரை அருகில் உள்ள பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்

அனைத்து மதவழிபாட்டு தளங்களும்  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 

மேலும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். 

தளர்வு இல்லை

புதுச்சேரியில்  திரையரங்குகள், பார்கள், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது.

தற்போது புதுச்சேரியில் உள் போக்குவரத்து செயல்படுகின்றது  மேலும் புதுச்சேரி வழியே தமிழக பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதன் பிறகு பேருந்து இயக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback