Breaking News

FACT CHECK: ஈராக் மன்னர் நம்ருத அவரது மனைவி சமாதி 350 மில்லியன் டாலர் மதிப்பு நகைகளுடன் கண்டுபிடிப்பு உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில்  ஒருசெய்தி காட்டுதீ போல் பலராலும் ஷேர் செய்யப்டுகின்றது  அதாவது நான்தான் அல்லாஹ் என்று சொன்ன (ஈராக்) நம்ருத் என்ற ராஜாவின் மனைவி அணிந்து இருந்த நகை இதன் மதிப்பு 350 மில்லியன் டாலர்கள். இதனை தோண்டி எடுக்கபட்டது இத்துடன் சேர்த்து சில புகைப்படமும் பரப்பபடுகிறது



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உணமை என்ன


அதையும் ஏதோ உலக அதிசயம் போல் உண்மை என நம்பி நமது சகோதரர்களும் சிந்திக்காமல் ஆராயாமல் பரப்புகிறார்கள்.

அதை ஷேர் செய்வதால் நமக்கு என்ன நன்மை இருக்கு நம்ருத் வாழ்ந்த காலம் இப்ராஹீம் நபி அவர்கள் காலம் இப்ராஹிம் நபி அவர்கள் காலம் கி.மு.2000 தோராயமாக ஆனால் அதில் உள்ள நகைகள் புதுப்பொலிவுடன் தற்போதய டிசைனில் உள்ளது.


மேலும் படிக்க: மேலும் இதற்க்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவிய பொய்யான 100 செய்திகளின் தொகுப்பு படிக்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் https://www.adminmedia.in/2020/04/50.html?m=1


அதைவிட முக்கியமாக இஸ்லாமியர்களை எப்படி அடக்கம் செய்வார்கள் இது போல் நகைகள் கொண்டு அடக்கம் செய்வார்களா? 


நமது அட்மின் மீடியா மூலமாக  பல பதிவுகளுக்கு கண்டனம் & மறுப்பு செய்தி போட்டுள்ளோம் ஆனாலும் அது போல் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது சரி 

அந்த எலும்பு கூடுகள் யாருடயது உண்மை என்ன?

அந்த எலும்பு கூடுநம்ரத் என்பவருடயது கிடையாது 

அவரது மனைவியும் கிடையாது 


அந்த எலும்புகூடுகள் ஜரோப்பா,ஜெர்மனி,இத்தாலிபோன்ற நாடுகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பணியாற்றிய  கிறுஸ்தவ பாதிரியார்கள் உடையது

மேலும் அந்த தேவாலயங்களில் பணியாற்றிய பாதிரியார்கள் இறந்த பிறகு ஒர் குறிப்பிட்டுள்ள நாளில் அந்த சவப்பெட்டி யினை தோண்டி எடுத்து அந்த எலும்புகூடுகளை பதப்படுத்தி மெழுகு போட்டு நகை அலங்காரம் செய்து அவர்களுக்கு சிறப்பு பிராத்தனை செய்யப்படுகிறது. மக்கள் பார்வைக்கு அந்த நகை அணிந்த எலும்புகூடுகள் வைக்கப்படுகிறது.

ஆகையால்இது போல் செய்திகளை அனுப்பி மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். நீங்களும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுக்காதீர்கள்.


யாரோ ஒருவன் எனக்கு அனுப்பினான் நானும் அனுப்பினேன்என்று குறை கூறுபவர்களே உங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லையா

வரும் செய்திகள் அனைத்தையும் உண்மையா என்று தெரிந்து ஷேர் செய்யுங்கள்.

நம்பிக்கையாளர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால், (அதனை நன்கு விசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்; (ஏனேனில்-அவ்வாறு தெளிவுபடுத்திக் கொள்ளவில்லையானால்) அறியாமையினால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்துவிடுவீர்கள்  அப்போது நீங்கள் செய்தவற்றின் மீது வருத்தப்படுவோராய் விடுவீர்கள்.


(அல்ஹுஜுராத்:6)✅எனவே இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்புவதற்கு முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிரவும். செய்திகளின் உண்மை தன்மையை உடனுக்குடன் சரியான முறையில் அறிய அட்மின்மீடியாவுடன் தொடர்பில் இருங்கள்

அட்மின் மீடியா ஆதாரம் 1

மேலும் கடந்த 2017 ம் ஆண்டு அட்மின் மீடியாவின் மறுப்பு செய்தி

https://www.adminmedia.in/2017/08/blog-post_83.html?m=1


அட்மின் மீடியா ஆதாரம் 2

CNN தொலைக்காட்சியின் நேரடி செய்திகள் பார்வையிட கீழே உள்ள லிங்கினை கிளிக் செய்யுங்கள்

https://edition.cnn.com/style/gallery/beauty-from-the-crypt/index.html?gallery=%2F%2Fcdn.cnn.com%2Fcnnnext%2Fdam%2Fassets%2F131204144920-st-vincentus-stams-austria-heavenly-bodies.jpg


அட்மின் மீடியா ஆதாரம் 3

இது போல் பல ஆயிரம் புகைப்படங்கள் கீழே உள்ள பக்கத்தில் உள்ளன




அட்மின் மீடியா ஆதாரம் 4


https://www.youtube.com/watch?v=v1kqK2tnANI

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback