சவுதியில் மே 31முதல் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி : வழிமுறைகள் வெளியிட்ட சவுதி
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் மே31 ஞாயிற்றுக்கிழமை முதல் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது (மக்காவை தவிர: மக்காவில் ஜூன் 21ம் தேதிக்கு பிறகு திறக்க வாய்ப்பு உள்ளது)
பள்ளி வாசல்களில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் வெளியிட்டது
- பாங்கு சொல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்னால் பள்ளி திறக்கப்படும். தொழுகை முடிந்து 10 நிமிடத்திற்குப் பிறகு பள்ளிவாசல் மூடப்படும்.
- பாங்கு மற்றும் இகாமத்திற்கும் இடையில் பத்து நிமிடம் தான் இருக்கும்.
- தொழுகை நேரத்தில் மட்டுமே கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்கும்.
- குர்ஆன் மற்றும் புத்தகங்கள் தற்காலிகமாக மசூதிகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கும்.
- தொழுகையை முடித்து செல்பவர்கள் 2 மீட்டர் இடைவெளியில் ஒவ்வொருவராக செல்ல வேண்டும்.
- குடி தண்ணீர் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் அகற்றப்பட்டிருக்கும்/மூடப்பட்டிருக்கும்.
- மசூதிகளில் உணவு மற்றும் தண்ணீர் வினியோகிக்க கூடாது.
- கழிவறை மற்றும் ஒழு செய்யும் இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
- முகமூடியை அணிந்து கொள்ளுங்கள்
- 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருவதைத் தடுக்கவும் மசூதிகளுக்குள் நுழைவதைத் தவிர்ப்பது
- மசூதிகளுக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது கூட்டத்தைத் தவிர்க்கவும்
ஜூம்ஆ தொழுகையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
- வெள்ளிக்கிழமை தொழுகைக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகளைத் திறந்து, தொழுகைக்கு 20 நிமிடங்களுக்குப் பிறகு அவற்றை மூடுவது.
- தொழுகையுடன் வெள்ளிக்கிழமை பிரசங்கம் 15 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
