Breaking News

கத்தாரில் மாஸ்க் இல்லாமால் வெளியே வந்தால் ரூ 41 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறைதண்டனை..!!

அட்மின் மீடியா
0
கத்தாரில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 200,000 கத்தார் ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் கத்தார் நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.நம் இந்திய மதிப்பில் ரூபாய் 41.70 லட்சம் ஆகும்





இது குறித்து கத்தார் நாட்டின் செய்தி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இந்த விதியை மீறுபவர் மீது மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 200,000 கத்தார் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback