முடி திருத்துவோருக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு, விண்ணப்பிப்பது எப்படி
அட்மின் மீடியா
0
நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2,000 நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!
முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள், கிராமப் புறங்களில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவர்களிடமும்,
பேரூராட்சிப் பகுதிகளில் சம்மந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்களிடமும்,
நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கடைகள் இருக்கும் பகுதியின் மண்டல அலுவலர்களிடம் மனுவாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
அம்மனுக்களைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இரண்டு தவணையாக ரூபாய் 2,000 ரொக்கமாக வழங்கியதைப் போன்று, நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூபாய் 2,000 ரொக்கமாக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் நிர்வாக முதன்மை ஆணையர் வழங்குவார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு


