டெல்லியில் சிக்கி தவித்த தப்லிக் ஜமாத்தினர் தமிழகம் வர உள்ளார்கள்: மவுலானா மன்சூர் காஷிபி தகவல்
அட்மின் மீடியா
0
டெல்லியில் உள்ள தப்லிக் மாநாடுக்கு சென்ற இஸ்லாமியர்கள் எதிர் வரும் 16.05.2020 அன்று தமிழகம் வர உள்ளார்கள். மேலும் அவர்கள் தமிழகம் வர இதுவரை அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விவரிக்கின்றார். அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் மௌலானா முஹம்மது மன்சூர் காஷிபி அவர்கள்
கண்டிப்பாக வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
மேலும் இந்த கடினமான பணியினை கையில் எடுத்து பல கட்ட பிரச்சனைகளை சந்தித்து, அங்கு இருக்க கூடிய உம்மத்துக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து , அவர்களின் குடுமத்தார்களுக்கு ஆருதல் சொல்லி சட்டபோரட்டம் நடத்தி, அரசாங்கத்தை வலியுறுத்தி, என அனைத்து பணிகளையும் செய்த அனைத்து ஜமா அத்துல் உலமா சபையினருக்கும், அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளுக்கும், தமிழக அரசுக்கும், டெல்லி அரசுக்கும், மேலும் இதற்க்காக பாடுபட்ட அனைவருக்கும் அட்மின் மீடியா சார்பாக நன்றி தெரிவித்து கொள்கின்றோம்
Tags: மார்க்க செய்தி