Breaking News

மாவு பாக்கெட்டில் ரூ.15000 பணம் : அமீர்கான் விளக்கம்

அட்மின் மீடியா
0
கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் இருக்கும் மக்களுக்கு உதவ பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்கள்  கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் 15,000 ரூபாயை வைத்துக் கொடுத்தார் என ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்தார்கள் 



அந்த செய்திக்கு அட்மின் மீடியா அப்போதே மறுப்பு செய்தியும் வெளியிட்டது

ஆனால் நடிகர் அமீர்கான் அவர்கள் இது குறித்து தற்போது  தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் 


மேலும் படிக்க: FACT CHECK நடிகர் அமீர் கான் ஏழைகளுக்கு மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் வழங்கினாரா? உண்மை என்ன ?


கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் ஒரு தவறான கதை. அந்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார்," என்று டுவிட்டரில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback