Breaking News

FACT CHECK நடிகர் அமீர் கான் ஏழைகளுக்கு மாவு பாக்கெட்டில் 15,000 ரூபாய் வழங்கினாரா? உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு  23/04/2020  இரவில் ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் கோதுமை மாவு 1 கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது. வந்தவர்கள் இஸ்லாமிய சகோதர்கள்... எல்லோரும் வாங்க 1 பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்றும்   ஒருவருக்கு  1கிலோதானே என்றும் கூறினார்கள்  கொஞ்சம் வசதியானவர்கள் வந்து க்யூவில் நிற்கவில்லை. ஆனால் பசிகொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்து நாளைக்கு சாப்பாட்டிற்காக என்று வைத்துவிட்டு உறங்கி விட்டார்கள்… மறுநாள் காலையில் மாவை பிரித்த போது, ஒவ்வொரு பாக்கெட்டுக்குள்ளும் ரூபாய் 15000 இருந்தது. பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிசுதானே.. இந்த திட்டத்தை செயல் படுத்தியவர் வேறு யாருமில்லை நடிகர் அமீர்கான் என வீடியோ உடன் சமூக வலைதளங்களில் வேகமாக ஓர் தகவல் பரவி வருகிறது.










அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன

மேலே உள்ள சம்பவம் குறித்து சமூக வலைதளங்கலீல் பலரும் டெல்லியில் நடந்தது என்றும், குஜராத்தில் நடந்தது என்றும், மும்பையில் நடந்தது என்றும் ஷேர் செய்து வருகின்றார்கள்

முதலில் சமூக வலைதளங்களில் வந்த அந்த செய்தியானது த்ற்போது அப்படியே சில இனையதள செய்தியாகவும் வருகின்றது


ஆனால் அனைத்து இனையதள செய்திகளிலும் ஒரே மாதிரி தான் செய்தி பதிவு செய்துள்ளார்கள் உண்மை என்ன என்று தெரியாத நிலையில் அனைவரும் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார்கள்

சந்தேகம் 1

இதுவரை  எந்த முன்ணனி மீடியாக்களிலும் செய்தி வரவில்லை

சந்தேகம் 2

அனைவரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள மாவுடன் பணம் எடுக்கும் வீடியோ ஒன்றுதான் ஆனால் பேசுபவர்கள் மட்டும் மாறி இங்கு நடந்தது அங்கு நடந்தது என ஷேர் செய்கின்ரார்கள்

 சந்தேகம் 3

சில இனையதள செய்திகளில் இது சூரத்தில் நடந்தது என பதிவிட்டுள்ளார்கள்
ஆனால் அதுவும் அனைவரும் ஒரே மாதிரி செய்தி தான். ஆனால் எங்கும் நடிகர் அமீர் கான் கொடுத்துள்ளார் என செய்தி இல்லை

அந்த சம்பவத்தின் அசல் வீடியோவில் உள்ளவர் வெளியிட்டுள்ள செய்தியில் அவரும் எங்கு நடந்தது என கூறவில்லை , யார் கொடுத்தார் எனவும் கூறவில்லை மேலும் அந்த அசல் வீடியோவில் அவர் பேசி மட்டும் தான் உள்ளார் அதன் பிறகு அதனை திரித்து பலரும் பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்கள் https://www.tiktok.com/@khansaheb028? அந்த அசல் வீடியோ இது தான்


நாமும் தொடர்ந்து  தேடும்போது அந்த செய்தியினை பற்றி FACT CHECK செய்துள்ள ஓர் செய்தி கண்ணில் பட்டது

அதில் பலரும் சமூக வலைதளங்களில் சூரத்தில் நடந்தது என ஷேர் செய்கின்றார்கள்.ஆனால் இதுபோல் சூரத்தில் நடக்கவில்லை எனவும் மேலும் தற்போது ஊரடங்கு நடப்பதால் இது போல் நடக்க வாய்ப்பு இல்லை என்று  அந்த தளம் கூறியுள்ளது


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback