Breaking News

BREAKING NEWS: பிளாஸ்மா சிகிச்சை மூலமாக ஒருவர் குணமடைந்துள்ளார்.

அட்மின் மீடியா
0
கொரானாவினை தடுக்க பல நாடுகள் அதற்கான தடுப்பு மருந்தினை தயாரிக்க ஆராய்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள் அதில் முதல் கட்ட முயற்ச்சியில் வெற்றி அடைந்துள்ளார்கள் ஆனால் அவை நடைமுறைக்கு வர காலதாமதம் ஏற்படலாம்.

கொரானாவினை கட்டுபடுத்தவும் , தடுக்கவும் இதுவரை மருந்து இல்லாதாததால் அதனை கட்டுபடுத்தமுடியாமல் உலகம் தத்தளித்து கொண்டுவருகின்றது .


இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரானா பாதிக்கப்பட்டவருக்கு அளித்தால்  அவரது ரத்ததில் கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல்  உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள் இதனை உலக சுகாதாரம் மையமும் அங்கிகரித்தது ஆகையால்  பல நாடுகளில் பிளஸ்மா சிகிச்சையினை பயன் படுத்த துவங்கி விட்டார்கள்

மேலும் படிக்க : பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? அதன் மூலம் கொரானாவினை குணப்படுத்தமுடியுமா?


இந்தியாவிலும் பிளாஸ்மா சிகிச்சை நடத்த இந்திய சுகாதார மையமும் அனுமதி அளித்தது மேலும் இந்தியாவிலும் கேரளாவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கபட்டுவருவது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க: கொரோனா நோய் ஒழிப்பில் உதவி வரும் முஸ்லீம்கள் 

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால்  அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 
அவரது  இரத்த சோதனை முடிவுகளில் கொரானா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ள்ளது அந்த நபர் தர்போது  கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்தி குணமடைய செய்வது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback