Breaking News

BREAKING NEWS: சென்னை, கோவை, மதுரையில் 4 நாள்கள், சேலம், திருப்பூரில் 3 நாள்கள் முழு ஊரடங்கு

அட்மின் மீடியா
0
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 



சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும்


சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை 6 மணி  முதல் 28ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்.


மேலும் இந்த 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்  கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்










Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback