Breaking News

டாக்டர் கார்த்திகேயன் ஆடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
10
நேற்று  மாலை முதல் திருவாரூர் மருத்துவர் கார்த்திகேயனுடன் ஒருவர் தொலைபேசியில் உரையாடியதை ஆடியோவாக சமூக வலைதலங்களில் வைரலாக வலம் வருகின்றது

அந்த ஆடியோவில்

டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு கொரானா பாசிட்டிவ் என வந்தாலும் அவர்களுக்கு கொரானா அறிகுறிகளான , காய்ச்சல், இருமல், சளி போன்றவைகள் இல்லை, எனவே இது மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது அதாவது கொரானா பாசிட்டிவ் இருந்தும் எவ்வித நோய் பாதிப்பும் இல்லை. மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். மருத்துவ உலகை வியக்கவைத்த அதிசயம் இது இவர்களின் ரத்தத்தை முறையாக பரிசோதித்தால் முழு உலக மக்களுக்கும் கொரானாவிலிருந்து நிவாரணம் கிடைக்கலாம் என அதில்  பேசுகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவில் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரனா பலி எண்ணிக்கையும், கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகின்றது. 

அதே சமயம் உலக நாடுகளில் கொரனாவினால் பாதித்த மக்களுக்கு காய்ச்சலும் , சளி, இருமலும் வருகின்றது, கொரானா முத்திய நிலையில் உள்ளவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்கின்றது. 

இது தான் உலகளாவிய கொரானா நோயினால் ஏற்படும் அறிகுறிகளாகும்

ஆனால் தமிழகத்தில் இது போல் இல்லை என்றே ஒரு கருத்து பரவுகின்றது


அந்த ஆடியோவில் நான் டாக்டர் கார்த்திகேயன் பேசுகின்றேன் என கூறுகின்றார்


  • அனால் நீங்கள் அந்த ஆடியோவினை முழுமையாக கேட்டால்
           நான் திருவாரூர் மருத்துவனையில் பணிபுரிகின்றேன் என கூறவில்லை


  • நான் திருவாரூர் மாவட்ட மருத்துவமனையில் டீனாக இருக்கின்றேன் எனஅவர் எங்கும் கூறவில்லை

ஒரு வேலை திருவாரூர் மருத்துவமனையில் மருத்துவர் கார்த்திகேயன் என்று உள்ளார்களா எனறு ஆராய்ந்ததில் 2 மருத்துவர்கள் அந்த பெயரில் உள்ளார்கள்


ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

ஆனால் அந்த திருவாரூர் மருத்துவமனை டீன் மருத்துவர் முத்துகுமரன்  அவர்களை அட்மின் மீடியா  தொடர்புகொண்டபோது:  இது சம்மந்தமாக விசாரித்தோம் நம் மருத்துவமனையில் கார்த்திகேயன் பெயரில் 2 மருத்துவர்கள் உள்ளார்கள், ஆனால் அவர்கள் இருவரின் குரலும் இது இல்லை , இது சமமந்தமாக அவர்களிடம் கேட்டதற்க்கும் இது நாங்கள் இல்லை இது போல் நாங்கள் பேசவில்லை என அவர்கள் மறுத்துள்ளார்கள்  மேலும் இது சம்மந்தமாக காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக கூறினார்.

மேலும் கொரானா பாஸிட்டிவ் என்று உள்ளவர்களுக்கு அறிகுறி இல்லை என்றாலும் அந்த வைரஸ் மற்றவர்களுக்கு அவர்களிடமிருந்து பரவ வாய்ப்பு உள்ளது எனவே  எங்களை இது போல் பொய் செய்திபோட்டு சங்கடப்படுத்தாரீர்கள் ,அனைத்து மக்களும் எச்சரிக்கையாக தனித்திருந்து விலகியிருந்து கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வோம் என கூறினார்

அந்த ஆடியோவில் பேசியது யார் என்று காவல்துறையினர் விசாரனைக்கு பிறகு தான் தெரியும்


அப்படியானால் அந்த ஆடியோவில் உள்ள கருத்துக்கள் பொய்யா என ஆராய்வோம்


அட்மின் மீடியா ஆதாரம்

அதாவது தமிழகத்தில் கொரானா அறிகுறி இல்லாமல் கொரானா பரவுகின்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறினார்

https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-spreads-without-symptoms-in-tamilnadu-edappadi-palanisamy-381885.html



அட்மின் மீடியா ஆதாரம்
மேலும் சுகாதாரதுறை அமைச்சர் அவர்கள் இது குறித்து ஆய்வு நடப்பதாக கூறினார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது

https://timesofindia.indiatimes.com/city/chennai/asymptomatic-tablighi-jamaat-cluster-spurs-research-on-virus-strain-in-tamil-nadu/articleshow/74976082.cms

Tags: மறுப்பு செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

10 Comments

  1. இது பேசியது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பேசிய விசியம் பொய்யாக போக வாய்ப்பு அதிகம் காரணம் இதை சிலர் படிக்காமல் 10தோட 11ன்னு ஷேர் செய்தி இருப்பர்..உண்மையில் இது times of india வில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திறுந்தார்..

    ReplyDelete
    Replies
    1. ஆம் தமிழக அரசு முதல்வரும் அறிவித்திருந்தார் தமிழகத்தில் கொரானா அறிகுறி இல்லாமல் கொரானா பரவுகின்றது எச்சரிக்கையாக இருங்கள் என கூறினார்

      Delete
    2. https://youtu.be/b-A1YXA4L_Y

      Delete
  2. https://timesofindia.indiatimes.com/city/chennai/asymptomatic-tablighi-jamaat-cluster-spurs-research-on-virus-strain-in-tamil-nadu/articleshow/74976082.cms

    ReplyDelete
  3. அட்மின் மீடியா இது பொய் என்று கூறவில்லை... திருவாரூர் என்று அதில் கூறப்படுவதால் திருவாரூரில் உள்ள டாக்டர் கார்த்திகேயனை அவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரது நன்பரை கேட்டபோது அவர் இது கார்த்திகேயனின் குரல் அல்ல என்று கூறியதை வைத்து இந்த உரையாடலை ஒருவன் மறுப்பானானால் அவனுக்கு சுய புத்தி சிந்தனை இல்லை என்பது தெளிவு.. ஆடியோவை தெளிவாக சிந்தனையுடன் கேட்டால் அது 100% உன்மை எதார்த்தமானது!
    கூடுதல் தகவலாக கொரோனா இரண்டு நாட்களுக்கு முன் பாசிட்டிவ் ஆக இருந்த கொரோனா தப்லீக் காரர்களிடம் நெகடிவ் ஆனது எப்படி இக்குபேசன் பீரியடை தாண்டியும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது ஏன் என்றல்லாம் ஏற்கனவே சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியிருந்ததை நினைவு கூறுங்கள்!

    ReplyDelete
  4. ஆடியோ உண்மையோ பொய்யோ ஆனால் அதில் கூறப்படும் விசயங்கள் உண்மைதான்.

    ReplyDelete
  5. பேசியது யார் , யாரென ஆராயாமல் , பேசிய கருத்து உண்மைதானா என்றறிவதே நல்லது.

    ReplyDelete
  6. Ittunai searchaihal tevai illaye..coronavirus paditta iztimavil pangedutta nabarhalin reports publish seidal podume ..ella kevihalukkum vidai kidaikume..

    ReplyDelete
  7. ஒரு மாதமாகியும் இறப்பு 10 அதில் தப்லீக் 5.ஒருமாதமாகியும் அறிகுறி இல்லை என்றால் ஆச்சரியம்

    ReplyDelete
  8. ஒரு மாதமாகியும் இறப்பு 10 அதில் தப்லீக் 5.ஒருமாதமாகியும் அறிகுறி இல்லை என்றால் ஆச்சரியம்

    ReplyDelete