Breaking News

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு: வாகனங்களை பெறுவது எப்படி?

அட்மின் மீடியா
0
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் ஊரடங்கை மீறியவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் வாகனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



காவல்நிலையம் வருபவர்கள் கண்டிப்பாக் சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 24-ம் தேதி அன்று முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசைப்படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்திற்கு வந்து வாகனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாகவே அனுப்பப்படும்.
தகவல் பெற்றவர்கள் நேரில் வந்தவுடன் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.

வாகன உரிமையாளர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்

டிரைவிங் லைசென்ஸ் 

வாகனத்தின் ஆர்.சி. புக் 

இவ்வாறு டிஜிபி திரிபாதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this