ஒவ்வொரு முஸ்லிமும் தப்லிக் ஜமாத்தை பின்பற்றுபவர்கள் இல்லை ,தப்லிக் ஜமாத்தினர் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை : சிறுபான்மை கமிஷன் மத்திய அரசுக்கு கடிதம்
அட்மின் மீடியா
0
ஒவ்வொரு முஸ்லிமும் தப்லிக் ஜமாத்தை பின்பற்றுபவர்கள் இல்லை ,தப்லிக் ஜமாத்தினர் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை என்று டெல்லி சிறுபான்மை கமிஷன் சேர்மன் டாக்டர் ஜபருல்லாஹ் இஸ்லாம் கான் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்
டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அப்பாவிகள்தான். இந்த பூமியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களை போலதான் இவர்களும் . இப்படி விளைவுகள் ஏற்படும் என்று எண்ணி செய்தது இல்லை இது
டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஏற்பாட்டாளர்கள் மட்டுமே கவனக்குறைவாக இருந்தனர் என்பது ஏற்புடையதல்ல லாக்டவுன் அறிவிப்பை பிரதமர் வெளியிட்ட பின்னரும் கூட நாட்டின் பல பகுதிகளில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கவனகுறைவாக இருந்தனர் என்பதும் உண்மை
உடனடியாக நாடு முழுவதும் அவர்களை தேடி தனிமைபடுத்தி பரிசோதனை செய்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் இதை அரசு அதிகாரிகள் வெளிப்படுத்திய விதமும் ஊடகங்கள் ஒளிபரப்பிய முறையும்தான் சிறுமான்மையினரை கவலைக்குள்ளாக்குகின்றது
இமாச்சலில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருக்கிறது.உள்ளூர் மக்களின் பேச்சால் அவர் தற்கொலை செய்ய நேரிட்டது. மேலும் தப்லீகி மாநாட்டில் பங்கேற்றதற்காக போபாலில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார் எனவே
ஒவ்வொரு முஸ்லிமும் தப்லீகியும் அல்ல; தப்லீகிகள் அனைவருக்கே கொரோனா பாதிப்பும் இல்லை என்பதையும் உணர்த்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அக்கடித்தின் நகலை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ளார்
https://www.indiatoday.in/india/story/not-every-tablighi-is-infected-not-every-muslim-is-tablighi-dmc-in-letter-to-home-minister-1667716-2020-04-16
Tags: முக்கிய அறிவிப்பு