Breaking News

தப்லீக் ஜமாத்திற்க்கு தடை விதிக்க உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
தப்லீக் ஜமாத் அமைப்பின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி உண்மைதான் 

டில்லியைச் சோந்த அஜய் கௌதம் என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில்:



டில்லி அரசின் ஊரடங்கு உத்தரவை மீறிய நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்புக்குச் சொந்தமான கட்டடத்தை தில்லி மாநகராட்சி சட்டத்தின் அடிப்படையில் இடிக்கவும் உத்தரவிட வேண்டும் மேலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கும் தில்லி அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது  என ANI செய்தி வெளியிட்டுள்ளது


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்

https://www.indiatvnews.com/news/india/petition-in-supreme-court-demands-demolition-of-nizamuddin-markaz-ban-on-tablighi-jamaat-activities-605448

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback