Breaking News

ஊடகங்களில் தப்லீக் ஜமாஅத் குறித்து அவதூறு – பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

அட்மின் மீடியா
0
தப்லீக் ஜமாஅத் குறித்து ஊடகங்கள் தவறான கருத்துக்களை  பரப்பி வருகின்றார்கள் என SDPI கட்சியின் மாநில செயலாளர் உமர் பாரூக் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்லார்



இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை உறுதி செய்த மத்திய அரசு, மார்ச் 20 வரை இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டது டெல்லியில் உரிய அனுமதி பெற்றே மாநாடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் மிகைபடுத்தி செய்தி வெளியிடுகின்றன.

எனவே தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது அளித்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய தமிழக டி.ஜி.பி க்கு உத்தரவிட வேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அந்த  மனு மீது விசாரனை நேற்று உயர்நீதிமன்ற்த்தில் விசாரனைக்கு வந்தது அதனை விசாரித்த மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து எடுக்கபட்ட நடவடிக்கை என்ன என்று  பதிலளிக்க அரசுக்கு  உத்தரவிட்டுள்ளார்கள்

Tags: முக்கிய அறிவிப்பு

Share this