Breaking News

குழந்தைகளுக்கு செல்போன்களை கொடுக்காதீர்கள்...

அட்மின் மீடியா
0

குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கலாமா குழந்தைகளுக்கு செல்போன்களை கொடுக்காதீர்கள்



என் குழந்தை எப்போதும் செல்போனில்தான் விளையாடும்

அவனுக்கு செல்போன் என்றால் உயிர். 

இரவில்கூட பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்

என் குழந்தை மொபைலில் எல்லா அப்ளிகேஷனையும் ஆன் செய்து பார்த்து விடும்

செல்போனை கையில் கொடுத்தால்தான் என் குழந்தை சாப்பிடும்

போனை பத்தி எனக்கு கூட இது எல்லாம் தெரியல என் குழந்தைக்கு எல்லாமே தெரியுது


தங்கள் குழந்தைகளை பற்றி மற்றவர்களிடம் பெருமிதம் பொங்க பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் இவை

இப்படி பேசும் பெரும்பாலானவர்களுக்கு அந்த செல்போன்களால் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிவதில்லை

செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு  அபாயம் நிறைந்தவை

முக்கியமாக மூளை வளர்ச்சியடையும் சிறு பருவத்தில் கதிர்வீச்சு குழந்தைகளை வெகுவாக பாதிக்கும்

இதனால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறையும்

செல்போன் குழந்தைகளின் அறிவை பெருக்கும் கருவி அல்ல

அதை வைத்துக்கொண்டு குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியாது

செல்போனை நன்றாக பயன்படுத்த தெரிந்த குழந்தைகள் எதிர்காலத்தில் புத்திசாலிகளாகிவிடுவார்கள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை

வேறு எதுவும் முக்கியம் இல்லை செல்போனே தங்கள் உலகம் என்று முடிவு செய்து விடுகிறார்கள்

இந்த சமூகத்திற்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல விலகி வாழ்பவர்களாக மாறிவிடுகிறார்கள்

குழந்தைகள் சக குழந்தைகளோடு பழகி, உறவாடி தங்கள் அனுபவங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்

அதுதான் அவர்களுக்கு மனோவளர்ச்சியை கொடுக்கும் 

செல்போனே உலகம் என்ற நிலையை அவர்கள் அடைந்துவிடும்போது, அவர்களுக்கு உலக அனுபவம் கிடைக்காது

குழந்தைகளுக்கு செல்போன்கொடுக்காதீர்கள். இணையதள வசதி செய்து கொடுக்காதீர்கள்


நம்முடைய குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க வேண்டும் என்றால் இதை செய்யாதீர்கள்

செல்போன் வாங்கிக்கொடுப்பதை பெருமையாக கருதாதீர்கள். மீண்டும் மீண்டும் சொல்கிறோம்..

குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீர்கள்..


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback