Breaking News

மே மாதம் ரேசனில் இலவச பொருட்கள் அரிசி கார்டுகளுக்கு மட்டும்: தமிழக அரசு

அட்மின் மீடியா
0
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே மே மாதத்துக்கான பொருள்கள் நியாயவிலைக் கடைகளில் விலையில்லாமல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அனைத்து மண்டல இணைப் பதிவாளா்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில்

தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மே மாதத்துக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். 

அதாவது, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், கோதுமை, விலையில்லாமல் வழங்கப்படும்  என்றும் 

சரியான எடையில் அனைத்துப் பொருள்களும் அளிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.


நியாயவிலைக் கடைகளுக்கு வரும் குடும்ப அட்டைதாரா்கள் ஒருவரோடு ஒருவா் நெருங்கி நிற்பதைத் தவிா்க்கும் விதமாக சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் தினசரி அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுச் செல்ல வருவதால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைத் தொடா்பு கொண்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கிருமி நாசினி தெளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

டோக்கன்கள் விநியோகம்: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்கள் நியாயவிலைக் கடைக்கு வந்து பொருள் பெற வேண்டிய நாள், நேரம் ஆகியன குறித்து டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். 

டோக்கன்களை இளம்பச்சை நிறத்தில் அச்சிட்டு முன்னதாகவே வைத்துக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 150 டோக்கன்கள் வழங்கி, காலை 75 பேருக்கும், மாலை 75 பேருக்கும் வழங்கப்பட வேண்டும். 

என்று தனது கடிதத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்

Tags: முக்கிய அறிவிப்பு

Share this