Breaking News

எச்சரிக்கை: வீடியோ காலின் போது வெடித்துச்சிதறிய செல்போன்

அட்மின் மீடியா
0
தந்தையுடன் வீடியோகாலில் பேசிக் கொண்டிருந்த போது செல்போன் வெடித்து சிதறியதில் பெண்ணின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது



திருவாரூர் மாவட்டம்நீடாமங்கலத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். அவருடயை மகள் ஆர்த்தி தனது தந்தையுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது செல்போன் தீடிரென வெடித்து சிதறியது.



அவர் செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே வீடியோ காலில் பேசியதாக தெரிகிறது. இதனால் சூடான செல்போன் வெடித்து சிதறியது. செல்போனின் உடைந்த பாகங்கள் அப்பெண்ணி கண்களில் புகுந்தன. இதனையடுத்து ஆர்த்தியை அவரது குடும்பத்தினர் நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சார்ஜ் போட்டுக்கொண்டே பேசியதான விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

எனவே சார்ஜ் போட்டு கொண்டு போன் பேசாதீர்கள் என அட்மின் மீடியா உங்களை அன்போடு கேட்டுகொள்கின்றது

Tags: எச்சரிக்கை செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback