Breaking News

இஸ்லாமியர்கள் மீது சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகள் கோரிக்கை

அட்மின் மீடியா
0
இன்று 05.04.2020. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அலுவலகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் கொரோனா அவசர உதவி குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அச. உமர் பாரூக், தப்லீக் ஜமாத் பொறுப்பாளர்கள் நெல்லை அமீன் மற்றும் கோடம்பாக்கம் ஜமாலுத்தீன், ஜமாஅத்துல் உலமா பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா உலவி, துணைப்பொதுச் செயலாளர் மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன


தீர்மானம் 1: 

ஊரடங்கு முடியும் வரை பள்ளிவாசல் திறக்ககூடாது

தீர்மானம் 2: 

கொரானாவிற்க்காக சுகாதாரதுறை கணக்கெடுப்புக்கு வரும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்

தீர்மானம் 3: 

சமூக வலைதளங்களில் கொரானா பற்றி வதந்திகளை ஷேர் செய்யாதீர்கள்

தீர்மானம் 4: 

தனிமைபடுத்தபட்டவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும் 7373736085 

தீர்மானம் 5: 

டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களும் அவர்களது குடும்பத்தாரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்

தீர்மானம் 6: 

கொரானாவினால் பாதிக்கபட்டவர்களுக்கும் , தனைமைபடுத்த பட்டவர்களுக்கும் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சையும் அடிப்படை வசதிகளும் செய்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை

தீர்மானம் 7: 

கொரானா பரிசோதனை அறிக்கைகளை விரைவாக அளிக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கபடுகின்றது

தீர்மானம் 8: 

இஸ்லாமியர்கள் மீது சமூகவலைதளங்களில் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யும்  நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை

தீர்மான முழு விவரம் 

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback