Breaking News

முஸ்லிம் என்பதால் டெலிவரி மேன் கொண்டு வந்த பொருளை வாங்க மறுப்பு!

அட்மின் மீடியா
0
மளிகை பொருட்களை டெலிவரி செய்பவர் முஸ்லிம் என்பதால் அவரிடமிருந்து பொருட்களை வாங்க மும்பையில் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 



இதுகுறித்து மும்பை கஷ்மீரா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், , சுப்ரியா சத்ருவேதி டெலிவரி ஏஜென்சியிடம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருட்களை பர்கத் பட்டேல் என்ற டெலிவரி மென் சுப்ரியா வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சுப்ரியாவின் கணவர் சத்ருவேதி பர்கத் பட்டேலிடமிருந்து பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். ஆனால் சுப்ரியா அந்த பொருட்களை வாங்க நினைத்தபோதும், பொருட்களை கொண்டு சென்றவர் முஸ்லிம் என்பதால் சத்ருவேதி மறுத்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரம் தொடர்பாகவும் சத்ருவேதி மீது வழக்கு இருந்துள்ளது. இது தொடர்பாக சத்ருவேதி கைது செய்யப்பட்டார்.

உல்கமே கொரோனா காரணமாக லாக்டவுனில் இருக்கும்போது ஒரு சிலர் மக்களின் அத்யாவசிய தேவைக்காக குடும்ப சூழல் கருதி உழைக்கின்றார்கள் அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது. அவர்களும் வெளியில் சுற்றுகின்றார்கள் அவர்கலும் மனிதர்கள் தான் மக்களே புரிந்து கோள்ளுங்கள்





Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback