ஏழைகளுக்கு மட்டுமே இலவச கொரோனா பரிசோதனை; உச்சநீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரிசோதனையை ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மறுஉத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனையை அனைத்து மக்களுக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது
இந்நிலையில் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனியார்மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு மட்டுமே இலவச பரிசோதனையை செய்ய வேண்டும் என உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மறு உத்தரவிட்டுள்ளது
Tags: முக்கிய செய்தி