கத்தார் நாட்டில் உள்ளவர்கள் இந்தியா திரும்ப வர உள்ளவர்கள் கணகெடுப்பு பணி துவக்கம்
அட்மின் மீடியா
0
கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப விரும்பும் கத்தாரில் தங்கியுள்ள இந்தியர்களின் தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், தகவல் நோக்கத்திற்காக விருப்பமுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதில் கத்தாரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தாயகம் செல்ல விரும்பும் இந்தியர்கள் தங்களின் பெயர், பாஸ்போர்ட் எண், வயது மற்றும் அந்த நபர் வைத்திருக்கும் விசா வகை – (குடியிருப்பு அனுமதி, வருகைக்கான விசா, சுற்றுலா விசா, வணிக விசா அல்லது குடும்ப விசா) உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பதிவிடுமாறு கத்தாரிற்கான இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
We are collecting data about people requesting repatriation to India. Please follow this link (https://t.co/Nnd1gz9u4v) and answer the questions. At this stage, the purpose is only to compile information. No decision or details yet on resumption of flights to India. 1/2— India in Qatar (@IndEmbDoha) April 26, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்
