Breaking News

FACT CHECK: தப்லிக் ஜமாத் பற்றி உண்மை செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளை கட்டுபடுத்தமுடியாது என உச்சநீதிமன்றம் கூறியதா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
தப்லிக் ஜமாத் பற்றி உண்மை செய்தியினை வெளியிடும் ஊடகங்களுக்கு தடை விதிக்கமுடியாது என உச்ச நீதிமன்றம்கூறியதாக ஓர் செய்திய்னை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உணமையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


 உண்மை என்ன

டில்லியில், கடந்த மாதம், தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியது குறித்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 

இது தொடர்பாக, ஜமாத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், பத்திரிகைகளில் ஒரு பிரிவினர், கொரோனா பரவலுக்கு, தப்லிக் ஜமாத் கூட்டம் தான் காரணம் என்பது போல, பொய் செய்திகளை வெளியிட்டு, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றார்கள் எனவே, இது தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.,பாப்டே தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரித்தது அப்போது பத்திரிகைகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. என்று கூறி வழக்கு விசாரணை, இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சமூக வலைதளங்களில் பலர் இந்த உதத்ரவை தவறாக பரப்பி வருகின்றார்கள். அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் உண்மையை வெளியிடும் ஊடகங்களுக்கு தடைவிதிக்கமுடியாது என்று கூறவில்லை.

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.thehindu.com/news/national/supreme-court-agrees-to-hear-pleas-on-tablighi-incident/article31333954.ece

எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback